யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம்
5 view
யாழ்ப்பாணம்,மே 24 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் யாழ் நகரில் சிறிது நேரம் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. எரிவாயு சிலிண்டர் விநியோகிப்படும் என நம்பி யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் செவ்வாய் காலை முதல் காத்திருந்த பொதுமக்கள், நீண்ட நேரமாகியும் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படாததால் விரக்தியடைந்து வீதியை மறித்தனர். இதனால் சிறிது நேரம் காங்கேசன்துறை வீதியூடான போக்குவரத்து தடைபட்டதுடன் குழப்பமான நிலை உருவானது. இதனையடுத்து அங்கு வருகை தந்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் வீதியை மறித்து போராடிய பொதுமக்களை சமரசப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, செவ்வாய்க்கிழமை காலை முதல் யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலை முன்பாக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் அங்கு வந்திருந்த பொலிஸார் இங்கு விநியோகம் இடம்பெறாது எனவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு செல்லுமாறும் தெரிவித்தனர். இதனையடுத்து யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச்…
The post யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
