கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: டக்ளஸ் தேவானந்தா உறுதி
28 view
வவுனியா, மே 24: கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் தலைவர்களை மாற்றுவது பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார். இன்றையதினம் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு மாவட்ட மக்களின் பல்துறைசார் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சர்வதேச தொடர்புகளும், சவால்களை எதிர்கொண்ட அனுபவசாலியுமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஒருமித்த செயற்பாட்டின் மூலம் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள முடியும். கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும். 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பாதிப்பு இல்லை. தலைவர்களை மாற்றுவது பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக…
The post கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: டக்ளஸ் தேவானந்தா உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: டக்ளஸ் தேவானந்தா உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
