கிள்ளித்தெளிப்புகள் தொடருமா?
4 view
ந.பரமேஸ்வரன் தமிழக அரசின் நிவாரண உதவி தமக்கும் கிடைக்குமா அல்லது வழமை போலவே சிங்கள ,முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பின், தமிழர்களுக்கும் கிள்ளி தெளிக்கப்படுமா என்பதே இப்போது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இன்று வரையும் தமிழர்களைக் காட்டியே பிச்சையெடுத்து வயிறு வளர்த்து வந்துள்ளது. இதற்கு இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எவருமே விதி விலக்கில்லை என்றும் சொல்லலாம். இவ்வாறு தமிழர்களைக்காட்டி பிச்சையெடுத்து அதை திசை திருப்பிய அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியமைக்கு பல உதாரணங்களை எடுத்துக்காட்டலாம். மகாவலித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது கனேடிய அரசாங்கம் நிதியுதவி அளிக்க முன்வந்தது. அப்போது இந்தத்திட்டம் வடபகுதி (தமிழர்களுக்கு) நன்மை பயக்கும் திட்டம் என்றே ஸ்ரீலங்கா அரசால் கூறப்பட்டது . ஆனால் நடந்ததோ சிங்களக் குடியேற்றம். இதே போல் யாழ்ப்பாண நூலகம் புனரமைக்கப்பட்ட போது, “யாழ்ப்ப்பண நூலகத்தைப் புனரமைப்பதற்கு செங்கல்லும் புத்தகங்களும் அன்பளிப்புச்செய்யுங்கள் ” என…
The post கிள்ளித்தெளிப்புகள் தொடருமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிள்ளித்தெளிப்புகள் தொடருமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
