தெணியான் மறைவுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
4 view
கொழும்பு, மே 24: ஈழத்தின் இலக்கிய பேராளுமைகளில் ஒருவரான தெணியான் அவர்களின் இழப்புச் செய்தியறிந்து துயரடைகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தெணியானின் மறைவு குறித்து விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அஞ்சலிக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – சுதந்திரமான இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும்,.நீதிக்காக குரல் எழுப்பும் மக்கள் மனங்களின் குரலாக அவைகள் ஒலிக்க வேண்டும், அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களை உருவாக்கஇலக்கியங்கள் பங்காற்ற வேண்டும், இத்தகைய எமது இலட்சிய கனவுகளுக்கு ஏற்றவாறு ஈழத்து இலக்கிய தளத்தில் தனித்துவமாக நின்று செயலாற்றிவர் அமரர் தெணியான் அவர்கள். போரியல் இலக்கியங்கள் பலவும் மக்களின் அவலங்கள் குறித்து எதுவும் பேசாது வெறுமனே வீரப்பிரதாபங்களை மட்டுமே பேசி வந்த காலச்சூழல் ஒன்றில், போர்ச்சூழலிலும் அரசியல் சமூக நீதியை தன் உயிர் மூச்சாக கொண்டு மக்களின் சமூக அவலங்களை இலக்கியமாக்கியவர்…
The post தெணியான் மறைவுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெணியான் மறைவுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
