நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் -முழுமையான தொகுப்பு!
14 view
நாட்ல் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் வாராந்த அமைச்சரவை கூட்டம் நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்றது. குறித்த அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் பின்வருமாறு, 01. இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் பெற்றோலியப் பொருட்கள் கொள்வனவுக்காக குறுகியகால கடன்களைப் பெற்றுக் கொள்ளல். நாட்டில் நிலவிவரும் பொருளாதார நிலைமையால் எமது நாட்டுக்குத் தேவையான பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்புடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் குறுகியகாலக் கடன் வசதியும், இந்திய அரச வங்கியின் ஒத்துழைப்பின் கீழ், மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் பெற்றுக்கொள்வதற்காக தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொண்டு தேவையான பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் கீழ், மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக…
The post நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் -முழுமையான தொகுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் -முழுமையான தொகுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
