நாட்டின் இன்றைய நிலைமைக்கு அரசியல் தோல்வியே காரணம்- வேலு குமார்
14 view
நாட்டின் இன்றைய நிலைமைக்கு, கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே காரணமாகும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எமது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகளின் தோல்வி இன்று முழுமொத்தமாக வெளிப்படுகின்றது. இலங்கையின் அரசியலில் பெரும்பான்மை சார்ந்த தேசிய கட்சிகள் பிரதான இடம் வகித்து வந்துள்ளது. அதே போன்று, இனங்கள் சார்ந்ததாகவும், பிராந்தியங்கள் சார்ந்ததாகவும், சிறுபாண்மை கட்சிகள் உருவாகி இருக்கின்றன. அதற்கு மேலதிகமாக பல சிறு கட்சிகளின் செயற்பாடுகளும் இருக்கின்றது. இன்றைய நாட்டின் நிலைமைக்கு, கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே காரணமாகும். நாட்டிற்கென தேசிய கொள்கை திட்டம் ஒன்றை வகுத்து, அதற்கமைய தூர நோக்குடன் எச்செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டிற்கென தேசிய கொள்கை ஒன்று இருக்கின்றதா? என கேட்டால், இல்லை என்பதே உண்மையாகும். மாறாக…
The post நாட்டின் இன்றைய நிலைமைக்கு அரசியல் தோல்வியே காரணம்- வேலு குமார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் இன்றைய நிலைமைக்கு அரசியல் தோல்வியே காரணம்- வேலு குமார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
