21வது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு
16 view
அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்புக்கான 21 ஆவது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடுதான் என்று சாரப்பட விசனம் தெரிவித்திருக்கின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம். நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவால் நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வரைவில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கியமான ஏற்பாடுகள் உள்ளடக்கப்படவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வரைவு தொடர்பில் கவலையும் அதிருப்தியும் தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “நீதி அமைச்சரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வரைவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆராய்ந்துள்ளது.…
The post 21வது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 21வது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
