மே – 9 வன்முறை – ஜே.பி.வி., பொலிஸ்மா அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கை

4 view
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு மக்கள் விடுதலை முன்னணியுடன் எவ்வித தொடர்பும் கிடையாது. ஜே.வி.பி. ஆதரவாளர்கள் மீது அரசியல் பழிவாங்கலை முன்னெடுப்பதற்கு சிலர் முயற்சிப்பதால் இது தொடர்பான விசாரணைகளில் பக்கசார்பற்ற தன்மையைப் பேணுமாறு பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பொலிஸ்மா அதிபருடன் திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பயங்கரவாதிகளே இந்த தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் பின்னர் அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் வன்முறைகள் பரவலடைந்தன. இவற்றின் பின்னணியில் ஜே.வி.பி. காணப்படுவதாக சாட்சியற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனவே இவை தொடர்பில் ஜே.வி.பி. அங்கத்தவர்கள் எவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா? அல்லது…
The post மே – 9 வன்முறை – ஜே.பி.வி., பொலிஸ்மா அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース