தனுஷை தங்கள் மகன் என கூறிய தம்பதியிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தனுஷ் !
35 view
தன்னை மகன் எனக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ள மதுரை தம்பதிக்கு ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில் காணாமல் போன தனது மகன் கலைச்செல்வன் தான், திரைப்பட நடிகர் தனுஷ் என்று உரிமை கோரி இருந்தனர். மேலும், தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராக தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அவரின் அங்க அடையாளங்களும் சரிபார்க்கப்பட்டன. கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் மகன் தனுஷ் என்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குளறுபடி உள்ளதாக கூறினார். தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் சரி பார்க்கப்பட்டு இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.…
The post தனுஷை தங்கள் மகன் என கூறிய தம்பதியிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தனுஷ் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனுஷை தங்கள் மகன் என கூறிய தம்பதியிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தனுஷ் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
