தமிழரசுக் கட்சிக்கு மீண்டும் தடை உத்தரவு!
14 view
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் இணை பொருளாளருமாகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளம்செழியன் கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு மீண்டும் 20.05.2022 விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது தொடர்ந்தும் 03.05.2022 வரை இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இவ் வழக்கு விசாரணையானது யாழ். மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருலாளரும் , மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியன் தம்மை கட்சியில் இருந்து, இலங்கை தமிழரசு கட்சி பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம் நீக்கியது தவறு என யாழ். மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஊடாக மனுத்தாக்கல் செய்திருந்தார். நிர்வாக செயலாளர் சூ. சேவியர் குலநாயகம் மட்டும் அழைப்பானையை 28.04.2022 அன்று பெற்றிருந்தார். அவர் 06.05.2022 அன்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தார். ஆனால் 20.05.2022 இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொது…
The post தமிழரசுக் கட்சிக்கு மீண்டும் தடை உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசுக் கட்சிக்கு மீண்டும் தடை உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
