புதிய அமைச்சரவையிலும் முன்னாள் அமைச்சர்களே; காலத்தை வீணடிக்காது பதவி விலகுங்கள்! – எதிரணி வலியுறுத்து
4 view
முன்னாள் அமைச்சர்களை மீண்டும், மீண்டும் நியமிப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகள் தீராது என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் காலத்தை வீணடிக்காது நாட்டை ஆட்சி செய்யக் கூடிய அணியிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று கோட்டா கோ கம போராட்டத்தை காட்டிக்கொடுத்துள்ளார் என்றே நாங்கள் கருதுகிறோம். எந்த நிபந்தனைகளையும் விதிக்காது அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதே இதற்கு காரணம். குறைந்தது அவர் பிரதமராக பதவியேற்று அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடி நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை அடையாளம் கண்டு, எரிவாயு, மின்சாரம், பசளை, எரிபொருள், மருந்துகளை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள…
The post புதிய அமைச்சரவையிலும் முன்னாள் அமைச்சர்களே; காலத்தை வீணடிக்காது பதவி விலகுங்கள்! – எதிரணி வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய அமைச்சரவையிலும் முன்னாள் அமைச்சர்களே; காலத்தை வீணடிக்காது பதவி விலகுங்கள்! – எதிரணி வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
