வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்
6 view
வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருணி விஜேவர்தன இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் இராஜினாமாவை அடுத்து அமைச்சின் செயலாளராகக் கடந்த வெள்ளிக்கிழமை அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்ட நிலையிலேயே, நேற்றைய தினம் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் முன்னிலையிலும் உரையாற்றினார். இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினரான அருணி விஜேவர்தன, இச்சேவையில் 34 வருடங்கள் ஈடுபட்டிருப்பதுடன் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சிலும், சர்வதேச நாடுகளிலுள்ள இலங்கைத்தூதரகங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத்தூதரகம், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைத்தூதரகம் ஆகிவற்றில் அருணி விஜேவர்தன பணியாற்றியுள்ளார். அத்தோடு ஒஸ்ட்ரியாவிற்கான இலங்கைத்தூதுவராகவும், வியன்னாவில் உள்ள ஐ.நா அமைப்புக்களுக்கான நிரந்தரப்பிரதிநிதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சின் அங்கீகாரத்துடன் வியன்னாவில் உள்ள சர்வதேச…
The post வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
