யாழ்.மக்களுக்கு நன்றி தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
5 view
யாழ், மே 23 பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களோடு ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாதமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயித்.என்.பி.லியனகே தெரிவித்தார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் எவருக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் பொலிஸ் அதிகாரிகளுடன் முரண்படாமல் அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். யாழ்மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குகின்றார்கள். எனவே பொலிஸ் திணைக்களம் என்ற ரீதியில் யாழ்ப்பாண மக்களுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம். மேலும் தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஆரம்பித்தள்ளது. யாழில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது…
The post யாழ்.மக்களுக்கு நன்றி தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.மக்களுக்கு நன்றி தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
