நெருக்கடியை போக்குவதற்கு விவசாயத்தை வலுப்படுத்த அரசு சிந்திக்க வேண்டும்-விவசாய சம்மேளனம் கோரிக்கை!
25 view
தற்போதைய நெருக்கடியை போக்குவதற்கு விவசாயத்தை வலுப்படுத்தி உற்பத்தியை பெருக்கும் மூலோபாயம் தொடர்பாக அரசு சிந்திக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வவுனியா ஊடக அமையத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இன்று எரிபொருளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் எதிர்காலத்தில் உணவுக்காக அலையப்போகும் அவலநிலை காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் செய்த தவறால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றையே இன்று இறக்குமதி செய்யும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பொருளாதார பிரச்சனையை தீர்ப்பதற்கு வெளிநாடுகளிடம் கடன் வாங்குகின்றார்களே தவிர விவசாயத்தை வலுப்படுத்தி உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதற்கான வழிகாட்டல்களை யாரும் வழங்கவில்லை. எனவே எமக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். விவசாயிகளான நாங்கள் தோட்டச்செய்கைக்கான எரிபொருள் இல்லாமல் அல்லல் படுகின்றோம். எனவே எமக்கான மண்ணெண்ணை மற்றும் டீசலை தந்துதவுமாறு…
The post நெருக்கடியை போக்குவதற்கு விவசாயத்தை வலுப்படுத்த அரசு சிந்திக்க வேண்டும்-விவசாய சம்மேளனம் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெருக்கடியை போக்குவதற்கு விவசாயத்தை வலுப்படுத்த அரசு சிந்திக்க வேண்டும்-விவசாய சம்மேளனம் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
