ரணிலால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது! – ராஜித
24 view
இரகசிய ஒப்பந்தம் மூலம் இடைக்கால அரசாங்கத்தினை அமைத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது. பிரதி சபாநாயகர் விவகாரத்திலேயே உண்மையான ரணில் விக்கிரமசிங்கவின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரகசிய ஒப்பந்தத்தின் ஊடாகவே இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளார். அவர் ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாப்பதற்காக அன்றி நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒருபோதும் செயற்பட மாட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் கட்சி சாரா அரசாங்கத்தில் பங்கேற்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய அரசாங்கம் எவ்வாறு கட்சி சாராததாக அமையும்? அவ்வாறெனில் சகல துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டு அவர்களை உள்ளடக்கிய ஆட்சியொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஏனைய…
The post ரணிலால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது! – ராஜித appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது! – ராஜித appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
