பஷிலை பாதுகாப்பதை விடுத்து பெரமுனவினர் மக்களின் நிலைப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும்! – வாசுதேவ
4 view
அரசியலமைப்பு திருத்தம் குறித்து நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படாவிடின் சமூக கட்டமைப்பில் மீண்டும் பாரியதொரு நெருக்கடி நிலைமை தோற்றம் பெறும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவை பாதுகாக்கும் நோக்கத்தை விடுத்து தம்மை தெரிவு செய்த மக்களின் நிலைப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும். அரசாங்கம் கொள்கைக்கு முரணாக செயற்பட்ட காரணத்தினால் அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம். பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் நாட்டு மக்கள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்கும் மக்கள்…
The post பஷிலை பாதுகாப்பதை விடுத்து பெரமுனவினர் மக்களின் நிலைப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும்! – வாசுதேவ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஷிலை பாதுகாப்பதை விடுத்து பெரமுனவினர் மக்களின் நிலைப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும்! – வாசுதேவ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
