இலங்கைத் தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்

4 view
யாழ், மே 23 இலங்கைத் தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் தெணியான் நேற்று காலமானார். இவர் 1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப்பிரதேசத்திலுள்ள பொலிகண்டி கிராமத்தில் பிறந்து,தமிழ் ஆசிரியர்,பகுதித் தலைவர்,கனிஸ்ட அதிபர்,உப அதிபர்,தொலைக்கல்விப்போதனாசிரியர் போன்ற பதவிகளை வகித்து 2002ம்ஆண்டு பணி ஓய்வு பெற்ற தெனியான் எழுத்துலகில் இலங்கை அரசின் சாகித்திய ரத்னா விருது உட்பட பல விருதுகளை பெற்றவர். 1964ல்’விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’என்ற சிறுகதையுடன் ஆரம்பமான இவரது எழுத்துலகப்பிரவேசம் சுமார் 150 சிறுகதைகள் ,10 நாவல்கள்,3. குறுநாவல்கள்,5 வானொலிநாடகங்கள், நூற்றுக்கு மேலான கட்டுரைகள், விமர்சனங்கள்,செவ்விகள் என வளர்ந்து பரிணமித்தது. இவரது படைப்பாக்கங்கள், இலக்கியப்பணிகள் என்பவற்றிற்காக இலங்கைஅரசின் சாகித்யரத்னா விருது(2013), வட மாகாண ஆளுனர் விருது (2008), இலங்கை இந்து கலாசார அமைச்சின் கலாபூஷணம் விருது(2003) என்பன இவரைத் தேடி கௌரவித்தன. இவரது ‘கழுகுகள்’ நாவல் ‘தகவம்’பரிசையும், மரக்கொக்கு’ நாவல் இலங்கை அ ரசினதும், வடகிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும்…
The post இலங்கைத் தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース