பிரித்தானிய தீவொன்றில் இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!
11 view
பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 89 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் 42 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவுக்குச் சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒக்டோபரில் தமிழ் நாட்டிலிருந்து கனடா நோக்கி 89 இலங்கை தமிழ் அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை பிரித்தானியா இராணுவத்தினர் அதனை மீட்டு டியோகோ கார்சியாவிற்கு கொண்டு சென்றிருந்தனர். அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டியோகோ கார்சியா இராணுவதளத்திற்கு இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.முதல், வெளி உலகத்துடனான அவர்களது தொடர்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முதல் ஆறு வாரங்கள் அவர்களை எவரும் தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்பட்டது என இலங்கை தமிழ் அகதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லேய் டே…
The post பிரித்தானிய தீவொன்றில் இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரித்தானிய தீவொன்றில் இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
