ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது! யாழ். கடற்தொழிலாளர்கள் குற்றச்சாட்டு
5 view
ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனதாக வடமராட்சி கடல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கடல் தொழிலாளர்கள் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தங்களுக்கு கடந்த மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறவில்லை என்றும், இதனால் தாம் கடற்றொழிலிற்கு செல்ல முடியாது தமது வாழ்வாதாரத்திற்காக பெரிதும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர். தங்களுக்கு நாளாந்தம் குறைந்தபட்சம் 40 லிட்டர் எரிபொருள் தேவை, ஆனாலும் கடந்த காலங்களில் வாரத்திற்கு மட்டும் 40 லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், அதுவும் கடந்த மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்படவில்லை என்றும் தமது கடற்தொழிலில் படகு மற்றும் உபகரணங்களை கரையிலே ஏற்றிவைத்துவிட்டு தாம் தூங்கிக் கொண்டிருப்பதாக கடல் தொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். வாழ்வாதாரத்திற்கு நாளாந்தம் மிகப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் தமது…
The post ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது! யாழ். கடற்தொழிலாளர்கள் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது! யாழ். கடற்தொழிலாளர்கள் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
