ரணிலிடம் மனோ கணேசன் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை
5 view
குறைந்த வருமானமுடைய கொழும்பு தொடர்மாடி வீடுகளில் வசிக்கும் மக்களுக்குச் சமைத்த உணவு வழங்குங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் பிரதமருக்கு நேரடியாகக் கடிதம் அனுப்பியுள்ள மனோ கணேன், ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில், உணவு இல்லை. எரிவாயு இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான். மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுமின்றியும் தவிக்கிறார்கள். குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள், எமது ஆட்சிக்காலத்தில் சுமார் 13,000 தொடர்மாடி இல்லங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். இந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கும், கொழுப்பு நகரின் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கும், பங்கீட்டு அட்டைகள் வழங்கி, அவர்களுக்குச் சமைத்த உணவு வழங்குங்கள். இதற்காக, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பாரிய…
The post ரணிலிடம் மனோ கணேசன் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலிடம் மனோ கணேசன் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
