அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது
4 view
வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை நேற்று சனிக்கிழமை முன்னெடுத்தனர். கடந்த 17ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனடிப்படையில் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர், தெல்லிப்பழையைச் சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர்…
The post அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
