ஹரின்-மனுஷவுக்குப் பதில் கடிதம் அனுப்பிய பிரதமர்
14 view
கொழும்பு, மே 18 பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சமர்ப்பித்த கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார். பிரதமரிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்தால் புதிய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவை வழங்குவோம் என எம்.பி.க்கள் பல விடயங்கள் தொடர்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கடிதத்துக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா தொடர்பில், பெரும்பான்மை கருத்துடன் தான் உடன்படுவதாகவும், ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான பிரேரணையை ஆராய்ந்து சமர்பிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் அமைதியான முறையில்…
The post ஹரின்-மனுஷவுக்குப் பதில் கடிதம் அனுப்பிய பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹரின்-மனுஷவுக்குப் பதில் கடிதம் அனுப்பிய பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
