வடகொரியாவில் 3 நாட்களில் 8.2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு: 42 பேர் பலி
6 view
பியாங்யாங்,மே 15 உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளால் 2 ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. வடகொரியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்தது இல்லை. ஆனால் இப்போது அங்கும் இந்த தொற்று பரவ தொடங்கி உள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த 12ந்தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டில் இதுவரை ஒருவர்கூட தடுப்பூசி போடவில்லை. கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசிதான் என்கிற நிலையில் அங்கு யாரும் தடுப்பூசி போட்டு கொள்ளாத சூழலிலும், போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையிலும் வடகொரியா என்ன செய்ய போகிறது என உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. எனினும், கொரோனா தொற்று பலி எண்ணிக்கை அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே 6 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மேலும்…
The post வடகொரியாவில் 3 நாட்களில் 8.2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு: 42 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடகொரியாவில் 3 நாட்களில் 8.2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு: 42 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
