நெடுந்தீவில் படகு படுகொலை உறவுகளை நினைத்து அஞ்சலி

6 view
யாழ்ப்பாணம்,மே 15 குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைத்து நெடுந்தீவு தூய சவேரியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியையடுத்து குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் மலரஞ்சலியும் மேற்கொள்ளப்பட்டது. குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்டுகின்றது. 1985 ஆம் ஆண்டு இதேநாளில் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர். குமுதினி படகு நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினரால் இந்த படுகொலை அரங்கேறியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்ட அதேவேளை 30 ற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
The post நெடுந்தீவில் படகு படுகொலை உறவுகளை நினைத்து அஞ்சலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース