மீளுருவாகிய கோட்டா கோ கம – எதிர்ப்புகளை மீறி ஒரு மாதத்தைக் கடந்து தொடரும் போராட்டம்!
4 view
காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராட்டம் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமாக மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமாக மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மே மாதம் 9 ஆம் திகதி காலை ஒரு மாதம் நிறைவடையும் வரை அமைதியாகவும் சாத்வீகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நேற்றுடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்திருந்தது. இந்த நிலையில், நேற்றையதினம் அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்போம் என்ற தோரணையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் ஒன்றுகூடி கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததுடன்,…
The post மீளுருவாகிய கோட்டா கோ கம – எதிர்ப்புகளை மீறி ஒரு மாதத்தைக் கடந்து தொடரும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீளுருவாகிய கோட்டா கோ கம – எதிர்ப்புகளை மீறி ஒரு மாதத்தைக் கடந்து தொடரும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
