மக்கள் தெருவில் இறங்கிய பின்னர்தான் ஆளுந்தரப்பு தமது தவறுகளை உணர்ந்தது- ஸ்ரீநேசன்.

4 view
மக்கள் தெருவில் இறங்கிய பின்னர்தான் ஆளுந்தரப்பு தமது தவறுகளை ஏற்றுக்கொண்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஞானமுத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், 1-செல்வந்தர்களின் வரிகளை விலக்கியமை-இதனால் அரசாங்கத்திற்கு 60,000 கோடி ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டது. 2-சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) நேரகாலத்துடன் கடன்களைப் பெற்றிருந்தால் முன்கூட்டியே பொருளாதார நெருக்கடியைக் குறைத்திருக்க முடியும். 3-இரசாயன வளமாக்கியின் இறக்குமதியைத் தடை செய்தமையால் பயிர் விளைச்சல் 30-70 வீதம் வரை நட்டம் ஏற்பட்டது. இதனால் அரிசியின் விலை அதிகரித்துள்ளது.வெளிநாடுகளில் இரசாயனம் கலந்த அரிசியை இறக்குமதி செய்யவேண்டி ஏற்பட்து. இதனால் பல மில்லியன் டொலர்களை இலங்கை இழந்துள்ளது. 4-சீனி இறக்குமதியின் போது அரசுக்கு சேரவேண்டிய வரியினை ஒரு கிலோவுக்கானதை 50 ரூபாவில் இருந்து 25 சதங்களாகக் குறைத்தமையால் 1600 கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
The post மக்கள் தெருவில் இறங்கிய பின்னர்தான் ஆளுந்தரப்பு தமது தவறுகளை உணர்ந்தது- ஸ்ரீநேசன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース