வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானம்! சங்கங்கள் கூட்டாக முடிவு
5 view
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை மற்றும் அரசுக்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று (04.05) இணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் கூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 6 ஆம் திகதி அனைத்து கடைகளும் மூடப்படும். பேருந்துகள் சேவையில் ஈடுபடாது இருக்கவும், முற்சக்கரவண்டிகள் சேவையில் ஈடுபடாமலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், வங்கிகள், பல்கலைக்கழகம், ஆசிரியர் சங்கங்கள் தமது கடமையில் இருந்து விலகியிருக்கவும் தீர்மானித்துள்ளனர். இதேவேளை 6 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
The post வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானம்! சங்கங்கள் கூட்டாக முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானம்! சங்கங்கள் கூட்டாக முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
