கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
5 view
கற்பிட்டி பிரதான வீதியின் தளுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்துள்ளார். புத்தளம், பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் தளுவ பகுதியில் திங்கட்கிழமை (02) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஹம்மட் அக்மல் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். மேலும் தெரியவருகையில், சம்பவம் இடம்பெற்ற திங்கட்கிழமை இரவு குறித்த பிரதேச சபை உறுப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த பிரதேச சபை உறுப்பினரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்னர், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அன்றிரவே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இவ்வாறு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மீண்டும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்…
The post கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
