யோஷித ராஜபக்ஷவிற்கும் பல சொத்துக்கள் – அம்பலப்படுத்திய அனுர
4 view
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார். பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 காணிகள் தொடர்பான உறுதிப் பத்திரத்தை அவர் அமபலப்படுத்தியுள்ளார். மேலும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான நேரடி ஒளிபரப்பு வாகனம், பத்தரமுல்லையில் சி.எஸ்.என் வலையமைப்பின் 200 மில்லியன் ரூபாய் கட்டிடமும் அவரது பெயரில் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு பத்தரமுல்லையில் உள்ள 235 மில்லியன் மதிப்புடைய கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் வலையமைப்பு, 138 மில்லியன் பெறுமதியான நுகேகொடையில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடம் குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ராஜபக்ச அறக்கட்டளைக்கு தொண்டு நிறுவனத்திற்கு என மாற்றப்பட்ட காணியில் எவ்வாறு தொலைக்காட்சி நிலையத்தை நடத்தி முடித்தது என்றும் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார். இந்நிலையில்…
The post யோஷித ராஜபக்ஷவிற்கும் பல சொத்துக்கள் – அம்பலப்படுத்திய அனுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யோஷித ராஜபக்ஷவிற்கும் பல சொத்துக்கள் – அம்பலப்படுத்திய அனுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
