இத்தாலி செல்ல முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் கைது!
4 view
போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் தனது 14 மற்றும் 18 வயதுடைய மகள்களுடன் கத்தாரின் தோஹா ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக நேற்று இரவு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர்களின் விசா ஆவணங்கள் தொடர்பான சந்தேகம் காரணமாக, அவர் தனது மகள்களுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார். மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று, ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள துபாய் வழியாக இத்தாலிக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளது. 35 வயதான தாயின் வீசா ஆவணங்கள் மீதான சந்தேகம் காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த…
The post இத்தாலி செல்ல முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இத்தாலி செல்ல முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
