இலங்கை மக்களுக்கு உதவி – ஒரு ஒரு கோடி ரூபா வழங்கியது தி.மு.க!

4 view
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா வழங்கப்படவுள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று இதனை அறிவித்துள்ளது. அத்துடன், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத வேதனமும், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இலங்கை மக்களுக்கு உதவி வழங்க நன்கொடை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க தமிழக அரசுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.…
The post இலங்கை மக்களுக்கு உதவி – ஒரு ஒரு கோடி ரூபா வழங்கியது தி.மு.க! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース