இலங்கை அகதிகள் முகாமில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
16 view
ஈழத்தமிழ் பெண் ஒருவர் மண்டபம் அகதிகள் முகாம் வாசல் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சொந்த செலவில் புணரமைத்த வீட்டை புதிதாக வந்த இலங்கை தமிழர்களுக்கு கொடுத்துவிட்டு தனது உடமைகளை வெளியில் வீசியதாக கூறி இலங்கை ஈழத்தமிழ் பெண் ஒருவர் அகதிகள் முகாம் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவமானது தமிழகத்தில் உள்ள மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் இன்று இடம்பெற்றுள்ளது. மண்டபம் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் 450 குடும்பத்தைச் சேர்ந்த 1419 இலங்கைத் தமிழர்கள் அங்கு வசித்து வருகின்றனர். மேலும் முகாமில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்நிலையில்,தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வரக்கூடிய இலங்கை தமிழர்களை தங்க வைப்பதற்காக 147 வீடுகள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே வவுனியாவிலிருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக வந்த ராசிய…
The post இலங்கை அகதிகள் முகாமில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை அகதிகள் முகாமில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
