சுயாதீன குழுவினர் – ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு இடையில் சந்திப்பு

4 view
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளது. இதன் போது தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம், நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் பிரதி சபாநாயகர் பதவி தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இன்று நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதுடன் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தரப்பினரும் இணங்கியுள்ளனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விமல் வீரவங்ச, “ ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று எமது ஐந்து பேர் அடங்கிய குழு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளை போல் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணாத நாடாளுமன்ற அமர்வாக அடுத்த அமர்வை மாற்றாது, தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு இணக்கத்திற்கு வரவே நாங்கள் முயற்சித்து வருகின்றோம்” எனக் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
The post சுயாதீன குழுவினர் – ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு இடையில் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース