இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இன்னமும் தமிழ் மக்கள் உள்ளனர்! – பா.ஜ.க தலைவரிடம் விக்கி எம்.பி. சுட்டிக்காட்டு
5 view
வடமாகாணம் முழுவதும் இராணுவத்தினர் குவிந்து காணப்படுகின்றனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். 30 வருட காலமாக இராணுவத்தளபாடங்களை வாங்குவதற்காக கடன் உதவிகளை வாங்கியதால் தற்போது பொருளாதார பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இன்று, இந்திய பிரதமர் நரேந்திரமோடி சார்பாகவும், கட்சி சார்பாகவும் தன்னை சந்தித்து கலந்துரையாடியதாக சி.வி விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இன்றைய தினம் யாழில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியிருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பலாலி விமானத்தளத்தை மிக விரைவாக திறக்க வேண்டும். தென்னிந்தியாவிற்கு வட இலங்கைக்கும் இடையில் படகு சேவை மிக விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும். நேற்றைய தினம், இவ்விரண்டையும் பார்வையிட்டதுடன், இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பா.ஜ.க மாநிலத்தலைவர் கூறியிருந்தனர். ஸ்டார்லினால் மத்திய அரசாங்க அனுமதியுடன் இலங்கைக்கு உணவுப்பொருட்கள் தர இருப்பதாக அறிவித்திருந்ததை தெற்கு,…
The post இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இன்னமும் தமிழ் மக்கள் உள்ளனர்! – பா.ஜ.க தலைவரிடம் விக்கி எம்.பி. சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இன்னமும் தமிழ் மக்கள் உள்ளனர்! – பா.ஜ.க தலைவரிடம் விக்கி எம்.பி. சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
