இலங்கைக்கு உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்! – துரைரெத்தினம்
4 view
இலங்கைக்கு உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கைஅரசு, அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியின் வருகைக்குப் பின்னும், நாடாளுமன்ற புதிய மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கத்தின் பின் கொரோனா காரணமாகவும் இங்கு நடைபெற்றுள்ள குண்டு வெடிப்பு, சர்வதேசத்தின் இலங்கை தொடர்பான நம்பிக்கையீனம், நாட்டை ஆளுவதற்கு நிதி பற்றாக்குறை, வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டிய கடன்சுமை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையேற்றம், விவசாயத்திற்கான யூரியா, கிருமிநாசினியை இல்லாமலாக்கியமை போன்ற சூழ்நிலையில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்குகின்ற நிலையில் இலங்கை அரசு செய்வதறியாது திகைப்படைந்து நிற்கின்றது. இந்த நிலையில் கொரோனா காரணமாக டொலர் தட்டுப்பாட்டினாலும், நிதி பற்றாக்குறை, அரசாங்கத்தின் மோசடி ஆட்சிமுறை, வெளிநாடுகளின் அழுத்தங்கள், அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் போன்றவற்றினால்…
The post இலங்கைக்கு உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்! – துரைரெத்தினம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்! – துரைரெத்தினம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
