கொரோனா தொற்று எதிரொலி: சீனாவில் கட்டுப்பாடுகளால் மக்கள் கடும் அவதி
4 view
பீஜிங்,மே 02 உலகுக்கு கொரோனாவை வாரி வழங்கிய சீனா, தற்போது அந்தத் தொற்றுப்பரவலால் தத்தளிக்கிறது. குறிப்பாக அந்த நாட்டின் பொருளாதார தலைநகர் ஷாங்காய் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் 400 பேர் பலியாகி உள்ளனர். சனிக்கிழமை அங்கு புதிதாக 7,872 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது. ஷாங்காய்க்கு வெளியே சீனாவின் பிரதான பகுதிகளில் 384 பேருக்கு தொற்று உறுதியானது. 140 கோடி மக்களைக் கொண்ட சீன நாடு முழுவதும் தொற்று நோய் நிலைமை மாறுபடுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில் பொது முடக்கம் போடப்பட்டுள்ளது. பீஜிங் நகரில் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட அனுமதி இல்லை. ஓட்டல்களில் உணவுகளை வாங்கி வீட்டுக்கு எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் 50 சதவீதத்தினர்…
The post கொரோனா தொற்று எதிரொலி: சீனாவில் கட்டுப்பாடுகளால் மக்கள் கடும் அவதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொரோனா தொற்று எதிரொலி: சீனாவில் கட்டுப்பாடுகளால் மக்கள் கடும் அவதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
