இரவில் பிரதமர், ஜனாதிபதியை சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியவில்லை! சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில்
4 view
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. யாழ். பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து, ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால், அதைவிட அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியமை பெரிய விடயமாக அமையாது. ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 15 வருடகாலம் இணைந்து…
The post இரவில் பிரதமர், ஜனாதிபதியை சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியவில்லை! சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரவில் பிரதமர், ஜனாதிபதியை சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியவில்லை! சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
