நோன்புப் பெருநாளை கொண்டாட தயாராகும் மக்கள்
14 view
திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நாளை செவ்வாய்கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தயாராகிவருகின்றனர். அந்த வகையில் 30 நாட்கள் தாகித்திருந்து, பசித்திருந்து கொண்டாடும் இவ் நோன்புப் பெருநாளை குடும்பத்தோடும், அயலவர்களோடு இனிப்புப் பண்டங்களை பகிர்ந்து கொண்டாடுவதற்காக தங்கள் தங்கள் வீடுகளில் இனிப்புப் பண்டங்களை தயார்படுத்திவருகின்றனர். தற்போது நாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் திருகோணமலை – தோப்பூர் பகுதி மக்கள் நோன்புப் பெருநாளை சிக்கனமாக கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் கிராமங்களில் ஜவுளி கடைகளில் மக்கள் முண்டியடித்து பெருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு தேவையான ஆடைகளை கொள்வனவு செய்து வருகின்றனர். அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, மருதமுனை போன்ற பிரதேசங்களில் அதிகளவிலான மக்கள் கடைகளில் நிறைந்து வழிகின்றனர். பொருட்களின் அதிக உச்ச விலை…
The post நோன்புப் பெருநாளை கொண்டாட தயாராகும் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நோன்புப் பெருநாளை கொண்டாட தயாராகும் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
