சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் விடுதியிலிருந்து மாணவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு
15 view
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட அனைத்து மாணவர்களையும் விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பல்கலைகழக மாணவர்களுக்கு நேற்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதியில் உள்ள மாணவர்களை வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும், மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் செயற்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இறுதியாண்டு மாணவர் ஒருவர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கும் பல்கலைகழக நிர்வாகத்திற்கும் இடையே அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விரிவுரையாளர்கள் சிலர் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைநெறி நிறுவகத்தின் கட்டடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு மாணவர்களால் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் விரிவுரையாளர் ஒருவரால் மாணவர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். பின்னர் குறித்த பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்தமையை அடுத்து…
The post சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் விடுதியிலிருந்து மாணவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் விடுதியிலிருந்து மாணவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
