அநாகரிகமாக நடந்து கொண்ட ஹரின்! – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்
14 view
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஹரின் பெர்னாண்டோ பொதுமக்கள் முன்னிலையில் என்ன சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். மே தினக் கூட்டத்தில் இடம்பெற்ற குழப்பம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், மே தினப் பேரணியில் பேச்சாளர் பட்டியல் தொடர்பாகவே அவருடன் தமக்கு ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சில உறுப்பினர்களின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் பேச்சாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பேரணியில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எனினும் தாம், அதற்கு கண்ணியமான முறையில் எதிர்ப்பு தெரிவித்தபோது பெர்னாண்டோ தவறாக நடந்து கொண்டார்.…
The post அநாகரிகமாக நடந்து கொண்ட ஹரின்! – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநாகரிகமாக நடந்து கொண்ட ஹரின்! – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
