எரிபொருளின் தரத்தில் சிக்கல் இருந்தால் அறிவிக்கலாம்

15 view
கொழும்பு,மே 02 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களுக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்மட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை 0115234234 அல்லது 0115455130 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியப்படுத்த முடியும் என தெரிவித்தார். அதேசமயம் பல பிரதேசங்களில் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
The post எரிபொருளின் தரத்தில் சிக்கல் இருந்தால் அறிவிக்கலாம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース