காலிமுகத்திடலுக்கு செல்லும் கோமாளியும் ஹீரோவாகுவது பெரிய விடயமல்ல! விமல் வீரவன்ச
13 view
எந்தவொரு கோமாளியும் காலி முகத்திடலுக்கு சென்றால் ஹீரோவாகுவது பெரிய விடயமல்ல என ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை அசிங்கப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, தற்போதைய நிலையில் யாரும் பிரபலம் அடைய விரும்பினால் கோட்டாகம சென்றால் சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று வீதியில் இருப்பவர்களில் அதிகமானோர் மத்திய வர்க்கத்தினர் தான். இன்று அவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல், சவால் ஏற்பட்டுள்ளது. நெருக்கடிக்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்களில் வீரனாகுவது பெரிய விடயமல்ல. எந்த ஒரு கோமாளியும் காலி முகத்திடலுக்கு சென்றால் ஹீரோவாகுவது பெரிய விடயமல்ல. நான் அண்மையில் பார்த்தேன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தேசிய கொடியுடன் பொலிஸ் சீருடையில் சென்று வீரக் கதைகள் பேசிக்கொண்டிருந்தார். அவர் யார் என தேடி பார்த்தால் 5 கிலோகிராம் கஞ்சாவுடன் சிக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர்.…
The post காலிமுகத்திடலுக்கு செல்லும் கோமாளியும் ஹீரோவாகுவது பெரிய விடயமல்ல! விமல் வீரவன்ச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலிமுகத்திடலுக்கு செல்லும் கோமாளியும் ஹீரோவாகுவது பெரிய விடயமல்ல! விமல் வீரவன்ச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
