4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிக்க தீர்மானம்!
5 view
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை 4 ஆம் திகதி புதன்கிழமை சபாநாயகரிடம் கையளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை தெரிவித்தார். மேலும் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
The post 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிக்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிக்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
