சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை இந்தியாவிற்கு செல்வதாக கூறி கைது செய்த தலைமன்னார் கடற்படையினர்!

16 view
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்று கிழமை ஓய்வை கழிப்பதற்காக தலை மன்னார் கடலுக்கு சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13 மூன்று நபர்களை தலை மன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றைய விடுமுறையை முன்னிட்டு மன்னாரில் கரையோர பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்கள் பொழுதை கழிப்பதற்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையில், சிறுவர் குழு ஒன்றும் கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் குறித்த சிறுவர்கள் இந்தியா செல்ல முயற்சிப்பதாக தெரிவித்து தலை மன்னார் கடற்படையினரால் 13 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின் அவர்கள் தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை (02) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வதிவிடத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணி டினேஸன் ஆஜராகிய நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் கடற்கடையை பார்வையிடவே சென்றதாகவும் கடற்படையினர் வேண்டும் என்றே அவர்களை கைது செய்ததாகவும் சமர்பணத்தை மேற்கொண்டார். வழக்கை விசாரித்த மன்னார் நீதிவான்…
The post சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை இந்தியாவிற்கு செல்வதாக கூறி கைது செய்த தலைமன்னார் கடற்படையினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース