வவுனியாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்பு! விபரங்களும் வெளியாகின
4 view
வவுனியா – ஓமந்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்கப்பட்டதுடன், 16 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை, கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியில் ஆவா குழு என பெயரிடப்பட்ட பதாதைகளுடன் 40 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று (01.05) மாலை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் குறித்த பகுதிக்கு சென்ற போது சிலர் தப்பியோடி இருந்ததுடன், 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் ‘ஆவா குழு வவுனியா’ என பெயரிட்ட பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், கூரிய ஆயுதங்களையும் தம்வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட 16 பேரும் ஓமந்தைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்கள், பதாதைகள், கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வவுனியா மருதங்குளம், அரசன்குளம், கோவில்குளம்,…
The post வவுனியாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்பு! விபரங்களும் வெளியாகின appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்பு! விபரங்களும் வெளியாகின appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
