போராட்டங்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என்பதை போராட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் – அரசாங்கம்
4 view
போராட்டங்களால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது எனவும், அது பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும் எனவும் சுற்றுலா மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை அரசாங்கத்திற்கு எதிராக போராடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “நாட்டின் அரசாங்கத்தை மாற்றும் செயற்பாடுகள் அரசியலமைப்பின் பிரகாரம் இடம்பெற வேண்டும். தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. நாட்டில் நிலவும் அமைதியின்மையே இதற்குக் காரணம். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சுற்றுலாத்துறையை வலுப்படுத்த வேண்டும். இந்த நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும். நாடு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகிறார்கள். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் வரை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை…
The post போராட்டங்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என்பதை போராட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் – அரசாங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போராட்டங்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என்பதை போராட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் – அரசாங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
