புலம்பெயர்ந்த தேசத்திலுள்ள உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்! சுமந்திரன் எம்.பி கோரிக்கை
13 view
தற்பொழுது இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் கடந்து புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள எமது உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கப் போவதாக தமிழக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் நாங்கள் அதனை வரவேற்கின்றோம். ஆனால் பொருளாதார நெருக்கடியினால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே அனைவருக்கும் அந்த உதவிகளை வழங்கினால் நல்லதாக இருக்கும் என நாங்கள் எமது கருத்தினை தெரிவித்திருந்தோம். அதனை செவி மடுத்து இலங்கையில் உள்ள அனைவருக்கும் உதவி வழங்குவதற்கு தமிழக அரசு முன்வந்துள்ளது. அது ஒரு நல்ல விடயம் அதேபோல புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகளும் அவ்வாறான ஒரு வேலைத் திட்டத்தினை தற்போதுள்ள நாட்டிலுள்ள நெருக்கடி நிலையை கருத்தில்…
The post புலம்பெயர்ந்த தேசத்திலுள்ள உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்! சுமந்திரன் எம்.பி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலம்பெயர்ந்த தேசத்திலுள்ள உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்! சுமந்திரன் எம்.பி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
