‘மோட்டோ ஜிபி’ ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ்: பிரான்செஸ்கோ பெக்னய சம்பியன்!
4 view
மோட்டோ ஜிபி பந்தயத்தின் ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், டுகார்டி அணியின் பிரான்செஸ்கோ பெக்னய சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது. அந்த வகையில் ஆண்டின் ஆறாவது சுற்றான ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெரீஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 110.6 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 25 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர். இதில், டுகார்டி அணியின் பிரான்செஸ்கோ பெக்னய, பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 00.554 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ, 0.285 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார். இவரையடுத்து, அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ, 10.977 செக்கன்கள்…
The post ‘மோட்டோ ஜிபி’ ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ்: பிரான்செஸ்கோ பெக்னய சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘மோட்டோ ஜிபி’ ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ்: பிரான்செஸ்கோ பெக்னய சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
