காலம் கடந்து விட்டது கையை மீறிய இலங்கை கோட்டாபயவிடமே இறுதி முடிவு
49 view
தற்போதைய நெருக்கடியில் இலங்கையின் அனைத்து வழிகளும் கைமீறி போய்விட்டதாகவும், சுமூகமான தீர்வுகளை கானும் காலம் கடந்துவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசியல் ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அதனை நான் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம். அந்த நேரத்தில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அந்த விடயத்தினை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின்னர் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைய ஆரம்பித்தன. காலம் கடந்து சென்ற போது, பொருளாதார நிலைமைகள் மேலும் மேலும் நெருக்கடியான கட்டத்தினை அடைந்தது. மறுபுறம் காலிமுகத்திடல் தொடர் போராட்டங்கள் உடப்பட பொதுமக்கள் வீதிக்கு இறங்கினார்கள். அந்தப்போராட்டங்கள் முழு வீச்சினை அடைந்து விட்டன. இந்த நிலையில் கூட, 21 ஆவது திருத்தச்சட்டத்தினை தற்காலிக ஏற்பாடாக கொண்டுவருவதற்கான வரைவொன்றை தனிநபர்…
The post காலம் கடந்து விட்டது கையை மீறிய இலங்கை கோட்டாபயவிடமே இறுதி முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலம் கடந்து விட்டது கையை மீறிய இலங்கை கோட்டாபயவிடமே இறுதி முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
