காலிமுகத்திடலில் மே தினக் கூட்டம் – ‘மைனா கோ கம’வில் இணைந்த ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்கள்!
5 view
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்றுடன் 23 ஆவது நாளாகவும் தொடர்கிறது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் காலி முகத்திடலில் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கறுப்பு கொடிகளை ஏற்றி , செந்நிற ஆடையணிந்து அரசியல் தலையீடுகள் இன்றி இங்கு மேதினக் கூட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் அலரி மாளிகை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒரு வாரமாகத் தொடர்கிறது. எவ்வாறிருப்பினும் இங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை களைப்பதற்கு தொடர்ந்தும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரால் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் பொலிஸாருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. பின்னர் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
The post காலிமுகத்திடலில் மே தினக் கூட்டம் – ‘மைனா கோ கம’வில் இணைந்த ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலிமுகத்திடலில் மே தினக் கூட்டம் – ‘மைனா கோ கம’வில் இணைந்த ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
